×

2 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் புறப்பட்டார் ஜனாதிபதி

புதுடெல்லி: 2 நாட்கள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேசத்துக்கு இன்று தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். பாகிஸ்தானுடன் வங்காள தேசம் நடத்திய போரின் 50வது வெற்றி தினம், நாடு உதயமான 50வது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் நாளை, நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வரும்படி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வங்காளதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று வங்காளதேசம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். அந்நாட்டின் 50வது போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.வங்காளதேசத்தின் விடுதலை போர் 1971, மார்ச் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த தினத்தை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார். இதுகுறித்து இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கா கூறுகையில், கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஜனாதிபதியின் முதல் பயணம் இதுவாகும். ஜனாதிபதியின் வருகை டாக்காவுடனான இந்தியாவின் பிணைப்பை புதுப்பிக்க ஒரு வாய்ப்பாகும். பாரம்பரியம், வரலாறு மற்றும் வங்காளதேசத்தின் விடுதலை போரின் போது புதுடெல்லியின் ஆதரவை பகிர்ந்து கொண்ட அனுபவத்தை அடிப்படையாக கொண்டவையாக இந்த பயணம் அமையும்’ என்றார். இந்த பயணத்தின்போது, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ.கே.அப்துல் மொமன் ஆகியோர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post 2 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் புறப்பட்டார் ஜனாதிபதி appeared first on Dinakaran.

Tags : President ,Bangladesh ,New Delhi ,Ramnath Kovind ,Dinakaran ,
× RELATED சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பதவி...